முறையற்ற வழிகள் ஊடாக பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதித்தல், உரிய தகுதிகளை பூர்த்தி செய்யாத நபர்களுக்கு அரச சேவையில் தொழில் மற்றும் பதவி உயர்வு வழங்குதல், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல், கேள்விகளை (Tender) பெற்றுக்கொள்ளல் போன்ற குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் நமது வாக்குகளை கடந்த 75 வருடங்களாக துஸ்பிரயோகம் செய்துள்ளோமா? இல்லையா ? என்பது பற்றி நாம் மீண்டும் நினைத்துப்பார்க்க வேண்டும்.
நாம் அதன்பொருட்டு தெரிவுசெய்த அரசியல்வாதிகளின் வெற்றிக்காக எமது பணத்தையும் செலவு செய்து, எமக்கு நெருங்கியவர்களின் வாக்குகளையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். அதனால் இலங்கையர்கள் ஆகிய நாம் நமது நாட்டை இந்த அரசியல், பொருளாதார, சமூக, கலாசார பேரழிவுக்கு இட்டுச்சென்றதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தலைகளைக் காட்டும் பொதுக்கூட்டங்கள், வாகனப்பேரணி, நடைமுறை சாத்தியமற்ற அழகான வாக்குறுதிகள் மற்றும் திட்டமிடப்பட்டு செய்யப்படும் சமூக ஊடக பிரசாரங்களின் அடிப்படையில் உங்களின் வாக்குகளை அளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். சலுகைகள், கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு எந்தக்கட்சியில் இருந்தாலும் நாட்டிற்காக எமது வாக்குகளை சரியாகப் பயன்படுத்துவோம்.
தற்போதுள்ள ஊழல்படிந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து, தற்போது நாடு மற்றும் மக்கள் முகம்கொடுத்துள்ள துரதிஷ்டமான நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முற்போக்கு மற்றும் உண்மையான சக்திகளை போன்று பொதுமக்களையும் திட்டமிட்ட செயற்திட்டத்தின் ஊடாக ஒர் அணியில் சேர்த்துக்கொண்டு, எமது நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை நோக்கி கொண்டுசெல்வதற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய பொதுசக்தியை கட்டியெழுப்புதல்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவைப்பதற்கு தற்கால அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுப்பட்ட , பரந்த நோக்குடைய, அறிவார்ந்த, படைப்பாற்றல்மிக்க, நடைமுறைக்குரிய, பொதுநலனுக்காக உண்மையுடன் முன்வருகின்ற, அதன்பொருட்டு செயலாற்றக்கூடிய வேட்பாளர்களை பரந்த புத்திஜீவிகள் சபையின் மூலம் தெரிவு செய்தல்.
இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பரம்பரை உரிமையைப்போல ஒரே பிரிவினரின் பிடியில் வைத்திருப்பதை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு , குறுகிய கட்சி அரசியலை பற்றிக்கொண்டு, தனிப்பட்ட நலனுக்காக மட்டும் செயல்படும் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் சரியாக தெளிவுபடுத்தி, அவர்களின் வாக்குகளை மிகவும்தகுதியான வேட்பாளர் ஒருவருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தூண்டுவதன் மூலம் மிகவும் தகுதிவாய்ந்த மக்கள் பிரதிநிதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் முன்னின்று செயற்படல்.
அரச சேவை பிரிவுகளை முழுமையாக அரசியல்மயப்படுத்தலில் இருந்து விடுவித்து, அதன் செயற்திறன் மற்றும் உற்பத்தித்திறனை சட்டத்தை மதிக்கும் வகையிலும் நியாயத்தை மதிக்கும் வகையிலும் மேம்படுத்தவும், உரிய கட்டுப்படுத்தல் மற்றும் மதிப்பிடல் ஊடாக செயற்திறனற்ற மற்றும் ஊழல் செய்யக்கூடிய வகையில் நிறுவனங்களின் பிரதானிகள், அதிகாரிகள் உருவாகுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
இலங்கையை சகலதுறைகளிலும் அபிவிருத்தி அடைந்த சுதந்திர நாடாக மாற்றுவதற்குத் தேவையான வகையில் அனைத்து துறைகளும் உள்ளடக்கப்பட்டு நிரந்தர, பரந்த தேசிய கொள்கைகளை உருவாக்கல் மற்றும் அவற்றை சமூகமயப்படுத்தி யதார்த்தமான ஒன்றாக ஆக்குவதற்கு இளைஞர் யுவதிகள் உற்பட அனைத்து தரப்பினரதும் பங்களிப்பை செயற்திறன் மற்றும் பயன்மிக்கதாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
1. நாம் பொது நலனுக்காக செயற்படுகின்ற அதேவேளை பணம், அதிகாரம் மற்றும் புகழ் போன்ற தனிப்பட்ட நலன்களுக்காக அரசியல் செய்யமாட்டோம். பொது நலன் என நாம் குறிப்பிடுவது நீங்கள் மற்றும் நாம் உட்பட அனைத்து பொருளாதார, சமூக, சுற்றாடல் நலனுக்காக செயற்படுவதாகும்.
2. எமது கட்சியில் பதவிகளை பெற்றுக்கொள்ளும் அனைத்து உறுப்பினர்களும் முறையற்ற அல்லது சமூக விரோதமான முறையில் வருமானம் ஈட்டக் கூடாது என்பதுடன் எந்த ஒரு பிரிவினைவாதத்துடன், மதம் அல்லது இனவாதத்துடன் அல்லது லஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புபடக்கூடாது. அவ்வாறு தொடர்புபட்டால் எமது கட்சி அந்த நபர்களுக்கு எதிராக கட்சியின் யாப்பிற்கு அமைவாக முடிவுகளை எடுக்கும்.
3. நாம் புதிய அரசியல் கலாசாரத்திற்காக தோற்றுகின்ற அதேநேரம் தற்கால பாராளுமன்றத்தில் ஊழல்மிகுந்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் நிராகரிக்கின்றோம்.
4. உயர்ந்த தகுதிகளுடன் திறமை வாய்ந்த நபர்களை தெரிவு செய்யும்போது அவர்களை லஞ்சம் வாங்கவும் மற்றும் ஊழல் செய்வதற்கும் தூண்டுவதற்குள்ள வாய்ப்புகளை தடுக்கும் பொருட்டு அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களின் சேவைகளுக்கு ஏற்ற வகையில் உச்சபட்ச கொடுப்பனவுகள் மற்றும் உரிமைகளை கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
5. எந்த ஒர் ஊழல் மக்கள் பிரதிநிதிக்கும் லிபரல் ஜனநாயக கட்சியில் வேட்புமனு பெற்றுக்கொடுப்பதை நிராகரிக்கின்றோம்.
6. தற்போதுள்ள இந்த தோல்வியடைந்த முறைமையை மாற்றி அமைப்பதற்கு ஆயத்தமாகின்ற மற்றும் எமது கொள்கைகளுடன் இணங்குகின்ற எந்த ஒர் இலங்கை பிரஜையையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.
7. நாம் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனித்துவ அடையாளங்களை அதேவகையில் வைத்துக்கொள்வதற்கு தேவையான பன்முக சமூக எண்ணக்கருவிற்கு மதிப்பளித்து அனைத்து பிரஜைகளும் இலங்கையர்கள் எனக் கருதுவதுடன் மதம், இனம், சாதி மற்றும் பாலின ரீதியில் வேறுபடுத்தி கவணிக்கப்படுவதை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
8. ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிக்கும் அதேநேரம், மக்களின் இறையாண்மை, சட்டத்தின் ஆதிக்கம், அரசின் பொறுப்பு வகித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை நடைமுறையில் இருப்பதை நாம் உயர்வாக கருதுகின்றோம்.
9. நீதிமன்றம் மற்றும் அரசதுறைகள் முழுமையாக அரசியலற்றதாக இருக்க வேண்டும் எனவும், நீதி நிருவாக இயந்திரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைவருக்கும் சட்டம் ஒரேவகையில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் நாம் திடமாக நம்புகின்றோம்.
10. ஏழை, அங்கவீனர், விசேட தேவையுடையோர் அல்லது குழுக்கள் பாதிப்புறும் சொற்களை எமது அகராதியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து அவர்களும் அனைத்து பிரஜைகளுக்கு சமமானவர்கள் என சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
11.ஆர்ப்பாட்டம், பேரணி மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உள்ள உரிமையை மதிப்பதுடன், அவ்வாறு நடப்பதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கு நாம் நேரடியாகத் தலையிடுவோம்.
12. இலங்கையர் என்ற அடையாளத்தை பாதுகாத்து, தொழில்நுட்பம் உட்பட பூகோள ரீதியில் இடம்பெறும் நல்ல மாற்றங்களை திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும் என நாம் நம்புகின்றோம்.
13. நாம், தனிநபர் சுதந்திரம், அமைதி, சகவாழ்வு மற்றும் சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணிக்கும் அதேவேளை, வன்முறை, வெறுப்பூட்டும் பேச்சு, தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் தூற்றுதல் மற்றும் சேறு பூசுதலை நிராகரிக்கின்றோம்.
14. சுதந்திர சந்தை பொருளாதாரத்தின் மீது நாம் நம்பிக்கை கொள்கின்ற அதேவேளை , உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்று தொழில் வாய்ப்பிற்கு நேரடியாக பங்களிப்பு செய்கின்ற விவசாயிகள், தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களை பொருளாதாரத்தின் முக்கியமான பிரிவினராகக் கருதி கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற பொது சேவைகளை வழங்குவது அரசின் முழுமையான கட்டுப்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையில் நடைபெற வேண்டும் என நம்புகின்றோம்.
15. விவசாயிகள் உட்பட உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவை குறைத்தல், செயற்திறன், தரம் , மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் உற்பத்தி அளவை அதிகரிப்பதற்கும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதுடன் சுதந்திர வர்த்தக பொருளாதார முறைமையை உண்மையாகவே பொதுநலனுக்காக செயற்படுத்தல் மற்றும் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் நேரடி பொறுப்புக்கூறலாக உள்ளது என நாம் நம்புகிறோம்.
16. அதேப்போன்று உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தலும், ஏற்றுமதி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தேவையான அரச ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் நாம் இணங்குகின்றோம்.
01. இலங்கை மக்கள் மட்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிகொள்வதன் ஊடாக மேலும் கடன்பொறியில் சிக்காமல், தற்போது உள்ள மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழும் பொருட்டு ஒரு மூலோபாய திட்டத்தை செயற்படுத்தல்.
02. உள்நாட்டு விவசாயத்துறை, ஏனைய கைத்தொழில்துறைகள் மற்றும் சேவைகள் வழங்கும் பிரிவுகளுக்கு முதலிடம் கொடுத்து, இந்த நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைதுறைகளை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிதுறைகளை சரியாக முகாமைத்துவம் செய்து உள்நாட்டு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களை விரைவாக எழுந்து நிற்க வைக்கும் வசதிகளை வழங்குதல்.
03. அனைத்து பிரஜைகளின் மற்றும் வர்த்தகர்களின் வருமான ஈட்டலை தவறவிடாமல் அறிக்கை இடக்கூடிய வகையில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, வருமான மீதான நேரடிவரியை அறவிடுவதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரித்தல்.
04. வறுமை மற்றும் ஆபத்திற்கு உட்பட கூடியவர்களை அவற்றிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை விரைவாக நடைமுறைப்படுத்தல்.
05. அன்னியசெலாவணியை ஈட்டக்கூடிய அனைத்து தரப்புகளையும் மேம்படுத்தல்.
06. அரசத்துறைகளை முழுமையாக அரசியல்மயப்படுத்தலில் இருந்து விடுவித்தல், உரிய முறையில் சுயாதீன ஆணைகுழுக்களை தாபித்து அரசுத் துறைகளின் செயற்திறனை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை முறையாக ஒழுங்குபடுத்தி மறுசீரமைத்தல் அல்லது அரச கட்டுப்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
07. லிபரல் ஜனநாயக கட்சியின் அரசாங்கம் ஒன்றின் கீழ் அமைச்சரவைக்கு தெரிவு செய்யப்படுவதற்கு, வேட்பாளர் ஒருவரால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகுதிகள், அந்த தகுதிகளை பூர்த்தி செய்து அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட சகல வேட்பாளர்களினதும் பெயர்பட்டியல் மற்றும் உத்தேச வேலைத்திட்டங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போதே மக்களின் முன்வைத்தால்.
08.சலுகைகள், சிறப்புரிமைகளை எதிர்பார்த்து உறுப்பினர் பதவியை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்காக, உறுப்பினர் பதவியை எதிர்பார்த்து எமது கட்சியிலிருந்து முன்னிற்கின்ற வேட்பாளர்களுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை
வேற்புமனு பெற்றுக்கொடுக்கப்படும் சந்தர்ப்பத்திலயே செய்து கொள்ளல்.
09. சிரேஷ்ட அமைச்சர், ராஜாங்க அமைச்சர் பதவிகளை இல்லாதொழித்து , சகல அமைச்சுகளுக்கும் எந்தவித மேலதிக சலுகைகள் அல்லது கொடுப்பனவுகள் கிடைக்காத இளம் உறுப்பினர்கள் இருவர் உதவி உறுப்பினர்களாக நியமிக்கப்படுதல்.
10. அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் அலுவலர்களை நியமிக்கும் போது, உறவினர்கள் நியமிக்கப்படுவதை இல்லாதொழிப்பது மற்றும் சகல மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் சொத்துக்களை கணக்காய்விற்கு உட்படுத்தல் மற்றும் வருடாந்த வருமான செலவு விபரத்தை பெற்றுக்கொள்ளல்.
11. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் வருமானம் ஈட்டிய வழிகளை வெளிப்படுத்த முடியாத முறையற்ற மற்றும் அநியாயமாக தேடிய சொத்துக்கள் இருப்பின் முறையான விசாரணையின் பின்னர் அவற்றை அரச உடமையாக்க நடவடிக்கை எடுத்தல்.
01. நாட்டின் இறையாண்மையை, பெருமையை பாதுகாக்ககூடிய சுதந்திர, சுயாதீன வெளிநாட்டு கொள்கைகள்.
02. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரஜைகள் என இரு தரப்பினருக்கும் சமமாக செயல்படுத்தப்படும், இலகுவாக இற்றைப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் அடங்கிய, காலப்பகுதி மற்றும் சந்தர்ப்பச் சூழலுக்கேற்ற வகையில் செயற்திறன்மிக்க வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய கொள்கை.
03. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு ஏற்ற பின்னணியை உருவாக்குவதன் பொருட்டு சமூக நியாயம் மற்றும் நலன்புரிகளுக்கு தேவைப்படும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு எளிமையான, பொருத்தமான திறன்மிக்க ஒரு வரிக்கொள்கை.
04. உணவு பாதுகாப்பை செய்து கொள்ளல், உள்நாட்டு விவசாயத்தை பாதுகாத்தல், மற்றும் எழுந்து நிற்கச் செய்தல் மற்றும் மேம்பாட்டிற்காக ஒரு விரிவான விவசாயக் கொள்கை.
05. கல்வியில் சமமான சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்தி, அறிவு, திறமைகள் மற்றும் தேர்ச்சி நிறைந்த ஒழுக்கமான ஒரு முழுமையான பிரஜையை உருவாக்கும் பொருட்டு முழு கல்வி கட்டமைப்பையும் உள்ளடக்கிய ஒரு விரிவான தேசியக் கல்விக் கொள்கை.
06. சகல மக்களையும் உள்ளடக்கும் நோய் தடுப்பு, சுகப்படுத்தல், மற்றும் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்தலை இலக்காகக் கொண்ட ஒரு பரந்த சுகாதார மற்றும் மருத்துவ மருந்துகள் கொள்கை.
07. உள்நாட்டு கைத்தொழில், விவசாயம், தொழில்முனைவு, வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி போன்று வெளிநாட்டு முதலீடு ஆகிய அனைத்துத் தரப்பினதும் மேம்பாட்டுக்கு உதவும் ஒரு பரந்த உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை.
08. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களும் பெருமையுடன் வாழக்கூடிய வகையிலான கௌரவமான சம்பளக் கொள்கை.
09. லஞ்சம், ஊழல் மற்றும் அதிகாரவாதம் இல்லாத செயற்திறன் மிக்க, பயனுள்ள அரச சேவையை ஏற்படுத்துவதற்காக அரசியல் தலையீடற்ற , ஊழியர்களை சேர்ப்பதற்கும், பதவி உயர்வு வழங்கவும் ஒரு தேசிய அரச சேவைகள் கொள்கை.
10. மீள் உருவாக்கக்கூடிய வலுசக்தி வளங்களை மேம்படுத்தி , உள்நாட்டு வலுசக்தி தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் தொடர்ச்சியான சேவையை வழங்குவதற்கான ஒரு தேசிய வலுசக்தி கொள்கை.
11. சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்காக ஒரு தேசிய போக்குவரத்து கொள்கை.
12. இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட நில வளத்தை விவசாயம், வன பாதுகாப்பு, நீர்த்தேக்கம், கட்டுமானம் மற்றும் அவற்றோடு தொடர்புடைய துறைகளின் நிலைபேண்தகு முகாமைத்துவத்திற்கான ஒரு தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாண கொள்கை.
13. மனிதன் உட்பட பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் இருப்பை உறுதிசெய்யும் வகையில் நீர், வளி, மண் மற்றும் ஒலி மாசடைதலை குறைத்து சூழல் கட்டமைப்பை பாதுகாத்து, வளர்ச்சி மற்றும் அழகை உறுதிப்படுத்தும் கழிவு முகாமைத்துவத்திற்கான ஒரு தேசிய கொள்கை.
14.தமது தொழில்சார் திறமையை வளர்த்துக் கொள்ளவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து சம்பள முறன்பாட்டை குறைக்கும் தொழில் கொள்கை.
15. உணவு பாதுகாப்பு, மருத்துவ மருந்து மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் முறைகளை ஒழுங்குபடுத்தும், நுகர்வோர் உரிமைகளை உறுதிபடுத்தும் ஒரு தேசிய வர்த்தக கொள்கை.
16. ஆபத்திற்கு உட்படக்கூடிய நபர்களை பாதுகாத்தல், வறுமையை ஒழித்தல், சமூக நலன்புரி மற்றும் இடர் முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் ஒரு தேசிய நலன்புரி கொள்கை.
17. தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதுடன் முன்னுரிமை அடிப்படையில் தேசிய அபிவிருத்தி செயற்பாட்டின் போது குறித்த நிறுவனங்களுக்கு இடையே தொடர்புகளுக்கான ஒரு தேசிய அபிவிருத்தி கொள்கை.
18. அந்நிய செலாவணி ஈட்டல் , உள்நாட்டு அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இலங்கை அடையாளத்தை உலகிற்கு கொண்டு செல்வதை முன்னுரிமையாகக் கொண்ட சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக ஒரு தேசிய சுற்றுலா கொள்கை.
19.இலங்கைக்கே உரிய கலாசாரம், இலக்கியம், கலை நிர்மாணங்கள் மற்றும் மரபுரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒரு தேசிய மரபுரிமைக் கொள்கை.
20. பிள்ளைகள், இளையோர் உட்பட்ட பிரிவினரை போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக ஊடகங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்புமிக்க அடிமையாதல், பாதிப்புமிக்க தூண்டுதல், அழுத்தம் மற்றும் சங்கடத்திற்கு உட்படுதலை தடுப்பது, மீட்டெடுப்பது மற்றும் புனர்வாழ்வு அளிப்பதற்கான ஒரு சமூக பாதுகாப்புக் கொள்கை.
21. அரசின் நேரடி தலையீடற்ற ஒரு சுயாதீன ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு.
22. மக்கள் பங்கேற்புடன் நாட்டிற்கு பொருத்தமான இடைவெளியற்ற லிபரல் ஜனநாயக புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் தற்போதைய நீதி கட்டமைப்பை காலத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு முறையொன்றின் ஊடாக இற்றைப்படுத்தல்.
எந்த ஒரு தனி மனிதனும் தனித்து சாதிக்க முடியாத சாதனைகளை மக்களாகிய நாம் இணைந்து சாதிக்கிறோம்...