உண்மையில் நாட்டிற்கு தேவைப்படுவது இன்னும் ஒரு புதிய அரசியல் கட்சி மட்டுமல்ல.
நாட்டைப் மீட்டெடுக்கக்கூடிய, நாட்டை கட்டியெழுப்பும், இந்த பூமியில் விதைக்க கூடிய நடைமுறை சாத்தியமான புதிய படைப்புத்தன்மைக்க எண்ணக்கரு.
ஆம் எனக் கூறுகின்ற, மிகுந்த நம்பிக்கையுடன் அதற்கென நடைமுறைப்படுத்தக் கூடிய செயற்திட்டங்களை கைவசம் வைத்திருக்கின்ற மனிதர்கள் எமது சமூகத்திலே உள்ளனர்.
அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு இடமளிக்கக்கூடிய கட்சி முறைமை ஒன்று எமது நாட்டில் இன்று வரை இல்லை. அவ்வாறான புதிய என்ன கரு ஒன்றின் ஊடாக செயல்படுவதற்கு தற்போதுள்ள மரபுசார் கட்சிகளினால் முடியாது.
அந்த மரபுசார் கட்சிகள் எந்த ரூபத்தில் மக்களின் முன்னால் வந்தாலும் அவர்களின் முன்னைய செயற்பாடுகளினால் மக்கள் அந்தக் கட்சிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அதனால் உண்மையாகவே நாட்டை மீட்டெடுக்க முடியும் என அவர்கள் கூறினாலும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது ஒரு சவாலே.
அதன் பொருட்டு நாம் வரிசை கட்டி நிற்பதற்கே இந்த தயார்படுத்தலாகும்.
ஆம் லிபரல் என்பது எளிமையாக சுதந்திரம் என்பதைக்குறிக்கும். லிபரல்வாதம் என்பது 'சுதந்திர சமூகத்திற்கான அரசியல் தத்துவம்' என்பதே. உண்மையில் நாம் முதலில் செய்யவேண்டியது என்னவென்றால் நாம் சுதந்திர மனிதர்கள், நாம் எவரினதும் அடிமைகள் அல்ல என்ற எண்ணத்தை சமூகமயப்படுத்துவதாகும்.
அப்படி என்றால் எமது முயற்சியானது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியில் சுதந்திரப் பிரஜையை உருவாக்குவதாகும்.
ஆம், சுதந்திர மனிதன் என்ற எண்ணக்கரு மற்றும் கருத்து உச்சளவில் செயற்படுத்தப்படும் நாடுகளிடையே மேற்கைரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளை சுட்டிக்காட்ட முடியும்.
சுதந்திரமான ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க எமது நாட்டின் இளைஞர், யுதிகள் லிபரல் ஜனநாயக நாடுகளுக்கு செல்வதற்கே முயற்சிக்கின்றனர்.
ஒருபோதும் முடியாது. இவ் அனைத்து கட்சிகளும் இனவாதம், மதவாதம், குடும்பவாதம், பிரிவினைவாதம், பிரபுவாதம் அல்லது வகுப்புவாதம் போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டு பாதுகாப்பாக உள்ளமையே அதற்கு காரணமாகும்.
அது அவ்வாறு இல்லை என எவ்வளவு கூறினாலும் இந்தக் கட்சிகள் தேர்தல் ஒன்றின் போது தமது வேட்பாளரை அந்தந்த பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட காரணிகளின் அடிப்படையிலேயே முன்னிறுத்துகின்றனர். அதனால் கட்சி ரீதியில் அந்த காரணிகளை கைவிடுவதன் மூலமே மக்கள் மத்தியில் இருந்து சாதிபேதம், மதபஏதம் போன்றவற்றை இல்லாது ஒழிக்க முடியும். இதன் பொருட்டே லிபரல் ஜனநாயக கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
ஒரே வார்த்தையில் கூறினால் ஊழல்.
ஒரே வார்த்தையில் கூறினால் ஊழல். Corruption in one word
பல தசாப்தங்களாக ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் அரச அதிகாரிகள் கூட்டாக அதனை படிப்படியாக செய்ததுடன், அந்த நிலைமை இன்று நாட்டின் அனைத்து பிரிவுகளுக்கும் பரவியுள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி கொவிட் பெருந்தொற்றின் போது வெளிவந்த போதிலும் ஆட்சியாளர்களின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாக தனியார்துறை உட்பட பொருளாதாரத்தின் சகல பிரிவுகளும் செயல் இழந்தன.
2009 யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இருந்து 10 வருடங்களுக்குள் சர்வதேச அரச பத்திரங்களை (International sovereign bonds-ISB) பயன்படுத்தி சர்வதேசக் கடனாகப் பெறப்பட்ட 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஊழல் மிகுந்த வழிகளில் செலவு செய்யப்பட்டமையே இன்று நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானக் காரணமாகும்.
சர்வதேசத்தின் தரப்படுத்தலுக்கு அமைய நாடு வீழ்ச்சி கண்டதனாலயே 2021ல் ISB கடன்குமிழ் வெடித்து சிதறியது என்பதை பொருளாதார நிபுணர்கள் அறிவர்.
இது எமது நாட்டின் 'படித்த ஊழல் அரச அதிகாரிகள் மற்றும் படிப்பறிவற்ற ஊழல் அரசியல்வாதிகளினால் ' செய்யப்பட்ட பொருளாதாரக் கொலையாகும். இது 2023 ல் உயர்நீதிமன்றத்தின் இலக்கம் SEFR 195/2022 வழக்கின் தீர்ப்பின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்கால பொருளாதார, சமூக, மத, அரசியல் நெருக்கடியில் இருந்து மீண்டெழ வேண்டுமாயின் குறுங்கால,, மத்திய, நீண்டகால ரீதியில் நடைமுறை சாத்தியமான திட்டங்கள் தீட்டப்பட்ட வேண்டும். அவற்றிற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டியவை,
அரசியல்வாதிகளைப் போன்றே அனேகமான அரச அதிகாரிகளும் ஊழல்வாதிகளே. அதனால் சாதாரண மக்களும் இன்று ஊழலுக்கு இரையாகி அவர்களும் அந்த ஊழலுக்கு ஒத்துழைப்பு வழங்குவோராக மாறிவிட்டனர்.
ஊழலுக்கு பிரதான காரணங்கள் பல உள்ளன. அவற்றுக்கு மத்தியில்.
வளங்களை பங்கிடுவதில் முறன்பாடு.
உரிய சம்பளம், வருமானம் இல்லாமை.
சிறப்பு உரிமைகள் உள்ள மற்றும் இல்லாத பிரிவினர் உள்ளமை.
பொருட்கள் மற்றும் சேவைகள் தட்டுப்பாடு.
சட்டத்தின் ஆதிக்கம் அனைவருக்கும் நியாயமாக இல்லாமை.
அரசியல்வாதிகளின் அடிமைகளாக இருக்க விரும்பாமல், உரிய இடம் கிடைக்காமல், சம்பள முரண்பாடு போன்ற காரணங்களால் நாட்டை விட்டுச் சென்றவர்கள் ஏராளம்.
நாசா நிறுவனத்தைப் போன்று உலகின் பலபாகங்களிலும் வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் சேவை செய்தவாறு பெறும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் நாட்டிற்கு புகழ் ஈட்டிக்கொடுத்துள்ளனர். அவர்கள் தங்களது அடிப்படைக் கல்வியைக் கற்றது இந்தநாட்டிலேயே.
சரியான தலைமைத்துவம் கிடைத்தால் திறமையானவர்கள் எனக்கூறும் ஏனைய நாட்டவர்களை விட அதிகமான திறமையானவர்கள் எமது நாட்டில் உருவாகுவர். உண்மையில் இலங்கையர்கள் திறமையானவர்களே.
எந்த ஒரு தனி மனிதனும் தனித்து சாதிக்க முடியாத சாதனைகளை மக்களாகிய நாம் இணைந்து சாதிக்கிறோம்...